சனி, 12 செப்டம்பர், 2009

மாதங்கள்!

சித்திரை வந்தால் நெய்பூசு!
வைகாசி வந்தால் கைவீசு!

ஆனியில் ஆற்றினில் தோணிவிடு!
ஆடியில் நின்றுநீ பாடிவிடு!

ஆவணி மாதம் அத்தை வந்தாள்!
புரட்டாசி மாதம் திரும்பிச்சென்றாள்!

ஐப்பசி மாதம் காற்றடிக்கும்!
கார்த்திகை தீபம் ஒளிகொடுக்கும்!

மார்கழி மாதம் குளிரடிக்கும்!
தைதை நாட்டியம் கால்படிக்கும்!

மாசியில் ஊசியில் நூலைவிட்டாள்!
பங்குனி ஆண்டெனும் முட்டையிட்டாள்!

பாத்தென்றல் முருகடியான்

1 கருத்து:

அண்ணாமலை..!! சொன்னது…

தமிழ்மாதங்களை இப்படி பாட்டாக சொல்லிக்கொடுத்தால் எந்தப் பிள்ளை மறக்கும்..!!
அருமை..!! அருமை..!!!