வியாழன், 20 ஆகஸ்ட், 2009

கைவீசு!


கைவீ சம்மா! கைவீசு!
கண்ணே! கனியே! கைவீசு!
கைவீ சம்மா! கைவீசு!
காலையில் எழுந்து கைவீசு!

பூவே! பூவே! கைவீசு!
பொய்சொல் லாதே! கைவீசு!
பொன்னே! மணியே! கைவீசு!
போட்டிப் போட்டுக் கைவீசு!

நடக்க நடக்க கைவீசு!
நாளும் நாளும் கைவீசு!
அடுக்கு விரலால் கைவீசு!
அன்பைக் காட்டிக் கைவீசு!

பாத்தென்றல் முருகடியான்

2 கருத்துகள்:

உமா சொன்னது…

பாடிப் பாடிக் களித்திடவே
பாடல் களிங்கே இருக்கிறதே..
பள்ளிக் கூட பிள்ளைகளே
பறந்து இங்கே வாருங்கள்..
நல்ல நல்ல கருத்துகளை
நயந்தே ஏற்றயிப் பாடல்களைச்
சின்ன சின்னக் கைத்தட்டி
சிரித்துப் பாடி மகிழ்வீரே!

மழலைச் சொல்வம் வாருங்கள்
மருந்தாம் இஃதைப் பாருங்கள்..
அன்பும் பண்பும் நிறைந்திருக்க
அரிய நல்லக் கருத்துக்களை
தேனாய் இனிக்கும் செம்மருந்தாம்
செந்தமிழ்ப் பாவில் கலந்துமக்கு
தென்றல் அடியார் கொடுத்திட்டார்
சேர்ந்தே சுவைக்க வாருங்கள்.

அற்புதம் சின்னஞ் சிறுவருக்கான உங்கள் பாடல்கள்.

அவனடிமை சொன்னது…

சிறுவர் சிறுமிகள் ஆடிடவே
குருவி குயில்போல் பாடிடவே

தென்றல் போலப் பாட்டிசைத்தார்
குன்றில் உள்ள முருகடியார்

கவிமணி தாக்கம் தெரிகிறதே
செவியில் தேன்போல் பாய்கிறதே

குவிந்த உள்ளம் குளிர்ந்துவிடும்
நவின்ற நாக்கின் நலம்பெருகும்

கவின்மிகு கவிதை நமக்கீந்தார்
புவியில் இதற்கோர் ஈடுண்டோ?