டிங்டாங் டிங்டாங் மணியோசை!
‘ச்சிங்சோங்’ வீட்டு மணியோசை!
‘செந்தில்’ வீட்டு மணியோசை!
கிணிகிணி கிணிகிணி மணியோசை!
கடிகாரம் ஒலிக்கும் மணியோசை!
திருடரைப் பிடிக்கும் மணியோசை!
தீயை அணைக்கும் மணியோசை!
கோயிலில் கேட்கும் மணியோசை!
குமரன் சிரிப்பது மணியோசை!
காலையில் எழுப்பும் மணியோசை
கடவுள் ஓசை மணியோசை!
பாத்தென்றல் முருகடியான்
1 கருத்து:
எளிமை,தெளிவு,அழகு,அற்புதம் உங்கள் வலைப்பதிவும்,கவிதைகளும்.
அன்புடன் உமா.
கருத்துரையிடுக