புன்னகை நிலவின் வில்லைகள்!
காக்கும் விடியல் காலைகள்!
கலைப்பைப் போக்கும் சோலைகள்!
(பூக்கள்…)
அன்பு சுரக்கும் நீரூற்று!
அணைத்துத் தவழும் இளங்காற்று!
இன்பம் விளைக்கும் புதுப்பாட்டு!
இறைவன் பாடும் தாலாட்டு!
(பூக்கள்…)
தத்தி நடக்கும் தாமரை!
தத்துவம் சொல்லும் பொதுமறை!
சத்தியம் பூக்கும் செடிகளே!
சந்தனக் குங்குமப் பொடிகளே!
(பூக்கள்…)
சிறகு முளைக்கும் கிளிகளே!
சிங்கைத் தாயின் விழிகளே!
உறவைப் பாடும் குயில்களே!
ஓடி ஆடும் மயில்களே!
(பூக்கள்…)
பாத்தென்றல் முருகடியான்
1 கருத்து:
மிக அருமையாக இருக்கிறது உங்கள் வலை. மழலை மருந்து மிக மிக அருமை. வணங்குகின்றேன். உங்கள் வலையின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.தொடர்ந்து வாசிக்கிறேன்.
அன்புடன் உமா.
கருத்துரையிடுக