செவ்வாய், 21 ஜூலை, 2009

அம்மா சொல்கேள்!

அம்மா சொல்கேள் அன்போடு!
ஆசான் சொல்கேள் அறிவோடு!
சும்மா இருந்தால் புகழேது?
சோம்பல் நீக்கி நலம்தேடு!

(அம்மா…)

கதிரவன் வருமுன் எழுந்துவிடு!
கருத்துடன் பாடம் படித்துவிடு!
புதுப்புதுக் கலையில் பயிற்சியெடு!
பொய்மொழி விலக்கிப் பணிந்துவிடு!

(அம்மா…)
பாத்தென்றல் முருகடியான்

2 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

வேரைப் புகழும் விழுது.


கனித்தமிழ்ப் பாவலன் கந்தன் அடிமை
தனித்தமிழ் பூக்கும் தடாகம்!_இனி நீ
த‌ரும்"பா" அனைத்தும் த‌மிழ்த்தாய் ம‌டியில்
விரும்பியே சேர்க்கும் விருது!!

விழுதாக‌.... உங்க‌ளின் அருள‌ர‌சு.
சி. க‌ருணாக‌ர‌சு.

அன்புடன் நான் சொன்னது…

கனித்தமிழ்ப் பாவலன் கந்தன் அடிமை
தனித்தமிழ் பூக்கும் தடாகம்!_இனி நீ
த‌ரும்"பா" அனைத்தும் த‌மிழ்த்தாய் முடியில்
விரும்பியே சேர்க்கும் விருது!!

விழுதாக‌.... உங்க‌ளின் அருள‌ர‌சு.
சி. க‌ருணாக‌ர‌சு.